அவளும் பெண் தானே – 9 (Avalum Pen Thane 9)

This story is part of the அவளும் பெண் தானே series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    தாமரை அந்த ஃபோட்டாக்களை பார்த்தபடி என்னிடம்,

    “பொண்ணா பிறந்த எல்லோருக்கும் இது ஒரு மறக்க முடியாத நாள்ங்க.. இந்த நாள் தான் ஒரு பெண் தன்னை முழுமையா ஒரு பெண்ணா உணருவா.. தனக்கு பிடிச்சவனிடம் தன்னை முழுசா குடுத்து அவனை தன் மனசுக்குள்ள உடம்புக்குள்ள எடுத்துக்கிறது ஒரு வரம்ங்க” சொல்ல கடந்த கால சுகமான நிகழ்வுகளிலிருந்து வெளியே வந்தேன்..

    அவள் சொல்வதும் உண்மை தான்.. தனக்கு வர போகிற ஆணுக்காக தன் அழகு எல்லாவற்றையும் பேணி பாதுகாத்து அவனிடம் அந்த அழகை குடுக்கும் போது அவர்களுக்கு கிடைக்கின்ற சுகத்தை தாண்டி ஒருவித மகிழ்ச்சி, மன நிம்மதி கண்டிப்பாக கிடைக்கும்..

    “நீ சொல்றது உண்மை தான் தாமரை.. ஆனா அதை கடைசி வர அனுபவிக்க குடுத்து வச்சு இருக்கனும்.. அதான் எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லையே.”

    “கடவுள் நல்ல மனசு இருக்குறவங்களுக்கு தான்ங்க கஷ்டத்த அதிகமாக குடுக்கிறார். ஆனா எல்லோரும் கஷ்டத்தை குடுத்தாலும் கை விட மாட்டார் சொல்றாங்க. அது உண்மையா? இல்ல பொய்யா? என தெரியலைங்க..”

    “ஆமா.. கடவுள் சந்தோஷத்த கிராம்ல குடுத்திட்டு கஷ்டத்தை மட்டும் கிலோ கணக்குல குடுத்திட்டே இருக்கார்.” சொல்ல

    “உங்கள் நல்ல மனசுக்கு இனி எல்லா நல்லபடியா நடக்கும்ங்க.” தாமரை சொல்ல

    உடனே நான் “ஏன் உனக்கும் நல்ல மனசு தானே. உனக்கும் நடக்கும் பாரு” சொல்ல

    “என்னைய மாதிரி பொண்ணோட மனச யாருங்க பாக்குறாங்க.. எல்லாரும் உடம்ப மட்டும் தான் பாக்குறாங்க.. அத பொறுமையா பாக்க கூட நேரம் இருக்காது. காசு குடுக்குற ஒரு காரணத்துக்காக அவனுங்க இஷ்டத்துக்கு உடம்புல கீறி கடிச்சு வச்சு போவாங்க.. என்ன பண்ண அந்த காசு வேணுமே.. அதுக்காக தான் எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கேன்.”

    “ம்ம்.” மட்டும் சொன்னேன்.. அதை தவிர வேறு என்ன என்னால் சொல்ல முடியும்.
    தாமரை மாதிரியான பெண்களை இந்த சமுகம் அப்படி தான பார்க்கிறது. அவர்களை ஐந்தறிவு உடைய விலங்களை விட கேவலமாக தான பார்க்கிறார்கள்.. ஆண்களுக்கு காம பசி எடுக்கும் போது எல்லாம் இவளை போன்றவளிடம் வந்து பசி தீர்த்துவிட்டு செல்கின்றனர். சில நோட்டுகளை கையில் திணித்துவிட்டு அவர்களின் விருப்பப்படி எல்லாம் நோகடித்து அனுபவிக்கலாம் என்பது வருபவர்களின் எண்ணமாக இருக்கிறது. என்ன செய்ய அவளை பற்றியோ அவளின் மனதை பற்றியோ உடலை பற்றியோ யாரும் எவரும் எந்த வித கவலையும் படுவதில்லை என யோசித்து கொண்டிருந்தேன்.

    அந்த சமயம் பார்த்து தாமரை

    “அப்படி என்னங்க பலமா யோசிக்கிறிங்க?”

    “உன்னைய பத்தி தான் தாமரை.?”

    “என்ன பத்தியா? அப்படி என்ன யோசிச்சிங்க..? சொல்லுங்க.”

    “உன்ன பத்தி உன் நிலைமைய பத்தி தான்.”

    “என்னைய பத்தி அப்படி என்ன யோசிச்சிங்க.?”

    “உனக்கு எல்லார மாதிரி வாழ்க்கை வாழனும்.. உனக்கு சில ஆசைகள் இருக்கும்ல.. அத பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்.”

    “நானே இப்படியெல்லாம் யோசித்தது இல்லிங்க.. யோசிச்சா மனசுக்குள்ள குழப்பம் இருந்திட்டே இருக்கும்.. அத பத்தி யோசிக்காம விட்டுட்டா அதுவே தானா சரியா போய்டும்ங்க. அதனாலே நா பெருசா எத பத்தியும் யோசிக்கிறதில்ல” என்றாள் தாமரை..

    அவள் சொல்வதும் சரி தான்.. யோசிக்க யோசிக்க மன குழப்பம் தான் அதிகமாகும் தவிர தீர்வு எதுவும் கிடைக்காது.

    என் கையில் திறந்தபடி இருந்த ஆல்பத்தை மூடி வைத்துவிட்டு எழ என்னோடு சேர்ந்து தாமரையும் எழுந்துக் கொண்டாள்.

    “தாமரை நீ பிரஸ் பண்ணிட்டு குளிக்கனும்னா குளி.. நா கொஞ்சம் வெளியில போய்ட்டு வரேன்.”

    “சரிங்க”

    “அந்த கதவுல ஒரு ஓட்டை இருக்கும் அது வழியா யாரு பாத்துட்டு கதை திற.. என்னை தவிர வேற யாரும் தெரியாத ஆள் வந்தா திறக்காத.”

    “சரிங்க.”

    “உன் வீட்டுல எப்படி இருப்பியோ அப்படி இரு. இங்க உன்ன வந்து யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க.. தொந்தரவு பண்ணமாட்ங்க.”

    “ம்ம்.. சரிங்க.. நீங்க போய்ட்டு வாங்க.” தாமரை சொல்ல என் வீட்டை விட்டு வெளியே வந்து என் ப்ளாக்கிற்கு எதிரே இருந்த மரத்தடியில் நின்றுக் கொண்டிருந்த காரின் மேல் மூடியிருந்த கவரை எடுத்து தூசி தட்டி நன்றாக துடைத்து விட்டு ஒரு மாதத்திற்கு பின் அதை வெளியே எடுத்துக் கொண்டு செல்கிறேன். அபார்மெண்ட் மெயின் கதவு பூட்டி இருக்க ஹாரன் அடிக்க வாட்ச்மேன் வேகமாக எழுந்து கதவை திறந்துவிட்டான்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு என் மனதிற்கும் உடலிற்கும் ஏதோ புதுமையான புத்துணர்ச்சி வந்தது போல் என்னால் உணர முடிந்தது. அதற்கு காரணம் தாமரை தான் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. அவளாக கூட இருக்கலாம்.. இல்லை அவளுடைய செய்கைகளாக கூட இருக்கலாம்.. இதையெல்லாம் மனதில் யோசித்தபடியே நான் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தேன்..
    அங்கு நான் வேலை விசயமாக பார்க்க வேண்டிய ஆளுக்காக சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின் அந்த ஆளிடம் வேலை விசயமாக என்னுடைய சந்தேகங்களை எல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்டு அதே சமயம் அவருக்கும் வேலை பற்றி புரிய வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

    காரை மகாபலிபுரம் செல்லும் சாலையில் திருப்பும் போது என்னுடைய நினைவுகளும் எனக்குள் திரும்பி வந்தன. நானும் அகல்யாவும் திருமணம் ஆன புதிதில் இந்த ரோட்டில் இதே காரில் பயணித்திருக்கிறோம். அவளுக்கு பழங்கால சிற்பங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனாலே ஹனிமூனிற்கு மகாபலிபுரம் போகலாம் என தன்னுடைய முதல் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தாள். அவளின் ஆசையை சொன்னது ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் ஹனிமூனிற்கு மகாபலிபுரமா என யோசிக்கவும் செய்தேன்.. பின் அவளின் விருப்பத்தை நிறைவேற்றலாம் முடிவு செய்து இதோ இதே சாலையில் அன்று இருவரும் பயணித்தோம்..

    காரில் வரும் போது அங்கு இருக்கும் சிற்பங்கள் பற்றியும் அது எப்போது எப்படி அமைக்கபட்டது என ஒவ்வொன்றாக விடாமல் சொல்லிக் கொண்டே வந்தாள். அங்கிருக்கும் சிற்பங்களின் அழகை பற்றி சொல்லும் போது

    நான் “அந்த சிற்பம் அவ்வளவு அழகாவா இருக்கும்?” கேட்க

    அதற்கு அவள் “அட ஆமாங்க நீ பாக்க தான போறிங்க.. பாத்ததும் நீங்களே அழகா இருக்கு சொல்வீங்க பாருங்க” என்றாள்..

    “அப்படியே அந்த சிற்பம் அழகா இருந்தாலும் அழகு சொல்லமாட்டேன்.” என்றதும்,

    என்னை திரும்பி பார்த்து, “ஏன்பா அழகாக இருக்கு சொல்லமாட்டிங்க?” கேட்க

    “அங்கிருக்கிற சிற்பத்த விட அழகான சிற்பம் பக்கத்தில இருந்தா அது எப்படி அழகா தெரியும். நீயே சொல்லு.”

    “நீங்க ஏதோ டபுள் மினிங்ல பேசுற மாதிரி தெரியுது. பேச்ச விடுங்க.. எப்ப பாரு அதே நெனப்பு தான்” முனுமுனுத்துக் கொண்டே வந்தாள் அகல்யா.

    “ஹேய் நா ஒன்னும் டபுள் மினிங்க்ல பேசுல. சிங்கிள் மீனிங்க் தான். பட் இன்டேரக்ட் மீனிங்க் அவ்வளவு தான்.”

    “அதுக்கு தான் நானும் அமைதியா வரேன்.”

    “ஏய் இப்ப என்ன சொல்லிட்டேன். இப்படி உம்முனு வர” நான் கேட்க

    “அதலாம் ஒன்னுமில்ல.. நீங்க ரோட்ட பாத்து ஓட்டுங்க.”

    “ஒன்னுமில்ல சொல்ற. ஏன் மூஞ்சிய அந்த சைட் திருப்பி வச்சியிருக்க.?”

    “ம்ம்.. சும்மா தான்”

    “நா சொன்னத தப்பா புரிஞ்சிகிட்ட நெனக்கிறேன்” சொல்லிவிட்டு அதன் பின்பு இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் உள்ளே சென்று சிற்பங்களை பார்க்கும் போது அகல்யாவின் காதில்

    “மனிதன் செதுக்கிய சிற்பத்தை பிரம்மன் செதுக்கிய சிற்பம் பார்க்கும் போது என் மனதில் மனிதனை விட பிரம்மன் அழகாக செதுக்கிவிட்டான் என நினைக்க தோன்றுகிறது” என்றேன்.

    நான் சொன்னதை கேட்டதும் வெட்கத்தில் தலை குனிந்தபடி நடந்தாள்.. நானும் அவளின் பின்னாலே அங்கிருந்த ஒவ்வொரு சிற்பமாக பார்த்துக் கொண்டே சென்றேன்.. அப்போது ஒரு பெண் நடனம் ஆடுவதை கல்லில் தத்துரூபமாக செதுக்கியிருந்தனர். அதை பார்த்ததும் அங்கே நின்றுவிட்டேன்.. ஒரு பெண்ணின் அழகு மொத்தையும் ஒற்றை கல்லில் செதுக்கிவிட முடிகிறது என்றால் அவள் எப்போதுமே ஒரு ஆச்சரியக்குறி தான்..

    அதற்குள் அகல்யா முன்னே சென்றவள் என்னை தேடி கொண்டு வந்தாள். என்னை பார்த்து

    “சார் ஏதோ பிரம்மன் செதுக்கினது தான் அழகுனு சொல்லிட்டு இருந்தீங்க.. இப்ப ஏதோ பிரம்ம புடிச்ச மாதிரி இந்த சிற்பத்த பாத்திட்டே நிக்கிறீங்க” கிண்டல் பண்ண

    “மனுசன் செதுக்கினது அழகாக இருந்தாலும் பாக்க மட்டும் முடியும்.. ஆனா எனக்காக பிரம்மன் செதுக்கின சிற்பத்த தடவி தொட்டு பார்த்து தேவைபட்ட என்னோடு அணைச்சுக்க கூட முடியும்” சொல்லி அவளின் இடுப்பை பிடித்து இழுத்து என்னோடு அணைக்க

    “அய்யோ விடுங்க.. உங்கள தேடிட்டு வந்தது தப்பா போச்சு.” என்றாள்.

    “ஏன் தேடிட்டு வந்த?”

    “ஏதோ தெரியாம வந்திட்டேன் விடுங்க.. யாராவது பாத்தா தப்பா நெனக்க போறாங்க.”

    “அதலாம் நினைக்கமாட்டாங்க. ஏன்னா இது மாதிரியான சிற்பங்கள் இங்க நெறைய இருக்கும்.. எல்லாரும் அத தான் பாப்பாங்க.. நம்மள கவனிக்கமாட்டாங்க.”
    என்றேன்.

    “நீங்க ரொம்ப மோசம்.. எப்ப பாரு அதே நெனப்பு தான்.”

    “உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல.”

    “இல்ல. நீங்க பண்றது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு.”

    “ஹனிமூனுக்கு வந்த இடத்துல ஹரிவாசனமா பாட முடியும்.. நீயே சொல்லு”

    “நீங்க ஒன்னும் பாட வேண்டாம்.. அமைதியா வந்தா போதும்” சொல்லி என்னை இழுத்துக் கொண்டு சென்றாள்.. பின் அங்கிருந்து கிளம்பி வரும் வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு வீடு திரும்பினோம்..

    இந்த ஹனிமூன் நினைவுகளுடனே நானும் வீடு வந்து சேர்ந்தேன். வீட்டின் கதவை தட்டியதும் கதவில் இருந்த துளையின் வழியே பார்த்த பிறகு தாமரை கதவை திறந்தாள்.. நான் உள்ளே நுழைந்ததும் என் வீட்டை பார்த்து நானே ஆச்சரியபட்டேன்.. வீட்டின் தரை எல்லாம் அவ்வளவு சுத்தமாக இருந்தது. ஆங்காங்கே சிதறி குப்பையாக கிடைந்தது பொருட்கள் எல்லாம் ஒழுங்குபடுத்தபட்டு இருந்தன. தரை கொஞ்சம் ஈரமாக இருந்தது. நீரை வைத்து துடைத்திருக்க வேண்டும்.. இதே போன்று எல்லா அறைகளும் சுத்தம் செய்யப்பட்டு துடைக்கபட்டு இருந்தது..

    தாமரை பார்த்து “என்ன தாமரை ஒருமணி நேரத்துல வீட்ட சுத்தமாக்கி புது வீடு மாதிரி மாத்திட்ட.”

    “தூசிய கூட்டி தண்ணி வச்சு துடைச்சு விட்டேன் அவ்வளவு தாங்க. வேற எதும் பண்ணலங்க.”

    “ம்ம்.. சரி.. நா உன்ன குளிக்க சொல்லிட்டு தான போனேன்.”

    “குளிக்கலாம் உள்ளே போனேங்க.. குழாய் திருகினா தண்ணீ வரலங்க.. அதான் என்ன பண்றது தெரியாம இருந்தேன்.. வீடு தூசியா இருந்ததுங்க.. அத கூட்டி சுத்தம் பண்ணி முடிக்க நீங்களும் வந்திட்டிங்க.”

    “ஓ.. அப்படியா.. பாத்ரூம்ல தண்ணீ வருமே” சொல்ல

    அவள் “இல்லிங்க வரல.. நீங்க வேணா பாருங்க” சொல்ல நான் சென்று குழாய் திறந்த போது அவள் சொன்ன மாதிரி தண்ணீர் வரவில்லை.. மேலே இருந்த குழாயின் வால்வு பூட்டியிருந்தால் அதை தாண்டி நீர் வராமல் இருந்திருக்கிறது.. அதை சரி செய்த பிறகு தாமரை கூப்பிட்ட
    அவளும் வந்தாள்..

    “இந்த குழாய்ய இடதுபக்கம் திருப்பினா வெந்நீர் வரும். வலதுபக்கம் திருப்பினா சாதாரணமா ஜில்லுனு தண்ணீ வரும்” சொல்ல அவளும் சரி என்றால். பின் அவள் ஷவரை காட்டி

    “இது என்னங்க மேலே இருக்கு” கேட்க

    “அது ஷவர். இத திருகின தண்ணீ வரும்” சொல்லி அதற்கான வால்வை திறக்க தண்ணீர் அவளின் மேல் விழுந்தது.

    தண்ணீர் விழுந்ததும் “ஸ்ஸ்ஸாஆஆ இது கூட நல்லா தா இருக்குங்க. தண்ணீ விழுகுறது கூட சூப்பரா இருக்குங்க” சொல்லி அவள் மிகவும் ரசித்தாள்.

    இவளின் பார்வையில் இவையெல்லாம் வினோதமானது தான். அவளின் வாழ்க்கையில் இது போன்ற எதையும் பார்த்து அனுபவித்திருக்கமாட்டாள். அதனால் மெட்ரோ சிட்டியின் வாழ்க்கையே அவளுக்கு வினோதமாக தான் தெரியும். இங்கு இருக்குற மக்கள் சாதாரணமாக புலங்குவது கூட அவளுக்கு ஆச்சரியமாக தான் தெரியும்.
    இன்னும் ஷவரில் இருந்து விழும் நீரை இரு கையால் தட்டி விளையாடி கொண்டிருந்தாள்.

    “சரி தாமரை நீ குளிச்சிட்டு வா. நா வெளியில இருக்கேன்” சொல்ல அவளும் சரி என கதவை சாத்தினாள். ஆனால் அவள் கதவை பெயருக்கு சாத்திட்டு தாள்பாள் போடாமல் தான் குளித்தாள். கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களுக்கு மேல் குளித்துவிட்டு கதவை திறந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவளை திரும்பி பார்த்தேன். அவளை பார்த்த அடுத்த நொடி மூச்சு நின்று விடுவது போல் ஆனது.

    இனியும் அவள் வருவாள்..

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்

    Leave a Comment