அவளும் பெண் தானே – 12 (avalum pen thane 12)

This story is part of the அவளும் பெண் தானே series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    அகல்யா என்னிடம் தன் கண்களை அகல விரித்து புருவத்தை உயர்த்தியபடி “என்ன சொன்னீங்க?” அவள் கேட்க அவள் கேட்டது கூட காதில் விழவில்லை. நான் அவளையும் அவளின் சற்றே காலமான பேச்சையும் ரசித்துக் கொண்டிருந்தேன். நான் அவளுக்கு பதில் சொல்லாததால் என் தோளை உலுக்கி மீண்டும்

    “என்ன சார் பகல் கனவா?” கேட்க

    “இது கனவா? கனவில்லையா? தெரியல. ஆனா கனவு மாதிரி தான் இருக்குனு” அவள் கேட்டதற்கு ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டிருக்க அவளே மீண்டும்

    “என்ன சார் யாரையும் லவ் பண்றீங்களா?” என திடீரென அவளாகவே கேட்டாள்.

    அவளின் கண்களை பார்த்தபடியே “இதுவரைக்கும் அந்த ஐடியா இல்ல. ஆனா இனி பண்ணலாம் இருக்கேன்” சொல்ல

    “என்ன பண்ணலாம் இருக்கீங்க?”

    “லவ் தான்.”

    “ஓ.. ஐ.. சி.. யார.?”

    “உங்கள மாதிரி அழகான பொண்ண தான்.” சொல்ல

    அவள் உடனே “என்ன சார் தீடிர்னு என் ரூட்ல கிராஸ் பண்ற மாதிரி தெரியுது?” சொல்ல

    “அட அப்படியெல்லாம் இல்ல.. சும்மா ஒரு ரிபரன்ஸ்க்கு சொன்னேன்” அவ்வளவு தான். என்றேன்

    “அதான பாத்தேன்.” அடுத்து பேசிக் கொண்டிருக்கும் போது அவளை சிஸ்டர் கூப்பிட்டார் ஒரு பெண்மணி வந்து சொல்ல

    “சரி சார் காபி குடிச்சிட்டு உங்க வேலைய பாருங்க சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல தயாரனாள். அந்த சமயம் பார்த்து

    “ஹலோ மேடம் காபி டம்பளரல அதிகமா இருக்கு என்ன பண்ண?” கூப்பிடு கேட்க

    “பரவாயில்ல ஒரு நாள்ல தான குடிங்க.” சொல்லிட்டு என் பதிலுக்கு கூட காத்திருக்காமல் சென்றுவிட்டாள்.

    அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாலும் என் நினைவுகள் இன்னும் அவளை சுற்றிக் கொண்டே இருந்தது.

    என் மனம் இன்னும் அவள் அந்த இடத்தில் இருப்பது போல் தான் உணர்ந்துக் கொண்டே இருந்தது. அந்த உணர்விலிருந்து மீண்டு வரவே அதிக நேரம் ஆனது. அவள் கையில் குடுத்திருந்த சென்ற டம்ளரில் இருந்த காபி காலியாகி இருந்தது.

    அந்த டம்ளரை யாரிடம் குடுப்பது என தெரியவில்லை. அதனாலே அந்த டம்ளரை கையில் எடுத்துக் கொண்டு இந்த டம்ளரை குடுக்கும் சாக்கிலாவது அவளை பார்த்து ஓரிரு வார்த்தை பேசிடமாட்டோமா என என் மனம் ஏங்கியது.

    அதனாலே நான் காபி குடித்த டம்ளரை எடுத்துக் கொண்டு அவளை காண அந்த ஹோம் முழுவதும் சுற்றி வந்தேன். ஆனால் அவள் மட்டும் என் கண்ணில் படவில்லை. மற்றவர்கள் கண்ணில் நான் படும் போதெல்லாம் என் கையில் இருந்த காபி டம்ளரை மறைக்க நான் பட்டபாடு எனக்கு தான் தெரியும்.

    அந்த டம்ளரை கையில் மறைத்தபடி அவள் எங்கு இருக்கிறாள் என தேடுவது சற்று சிரமமாக இருந்தது. இறுதியில் ஒரு வழியாக அந்த ஹோம் முழுவதும் சுற்றி திரிந்து அவள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் அவள் அந்த ஹோமின் சிஸ்டர் ரூமில் உட்கார்த்து சிஸ்டருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

    “என்னடா இது நமக்கு வந்த சோதனை” என மனதில் தோன்றியது. அவர்கள் “எப்போ பேசி முடிக்க நா எப்போ பாத்து பேச” என ஒன்றும் புரியாத மனநிலையில் அந்த இடத்தில் இருக்கவும் மனமில்லாமல் நகர்ந்து செல்லவும் மனமில்லாமல் குழப்பத்திலே யோசித்தபடி இரண்டடி எடுத்து வைத்து நடக்க பின் அந்த ரூமை திரும்பி பார்க்க என இப்படியே தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருந்தேன்.

    அதே சமயம் அந்த ஹோமில் இருப்பவர்கள் யாரும் என்னை பார்க்கிறார்களா என சுற்றியிலும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். ஒரு வழியாக அவர்களின் பேச்சு முடிந்து வெளியே வர நான் அங்கிருந்த மரத்தின் பின்னால் போய் ஒழிந்துக் கொண்டேன்.

    அகல்யாவும் அந்த சிஸ்டரின் பின்னாலே சென்றுக் கொண்டிருந்தாள். இப்போது எப்படி அவளை சந்தித்தது பேசுவது என என் மனம் தவியாய் தவித்து ஏங்கியது. அதற்காக அவர்களின் பின்னாலில் சென்று இங்கிருப்பவர் யாராவது பார்த்துவிட்டால் மானத்துடன் மரியாதையும் சேர்த்து போய்விடும்.

    என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது அந்த சிஸ்டரிடம் ஏதோ சொல்ல அவர் மட்டும் நடந்து சென்றார்.. அப்போது தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அந்த சிஸ்டர் அவளின் கண்ணில் இருந்து மறைந்ததும் அவள் சென்ற பாதையிலே திரும்பி வந்தாள். அதாவது நானிருக்கும் நோக்கி வர நானும் அந்த மரத்தின் பின்னால் இருந்து வெளியே வந்தேன்.

    இருவருமே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்த போது,

    “ஹலோ சார் உங்களுக்கு என்ன வேணும்?”

    “எதுவும் வேண்டாம்” என்றேன். ஆனால் மனமோ நீ தான் வேண்டும் என்றது.

    “பின்ன ஏன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க?”

    “உனக்கா.. இல்ல.. சிஸ்டர்.. காக.. இல்ல இல்ல அது.. வந்து..” என வார்த்தைகள் முழுமையாக வெளியே வராமல் திக்கி திணறி தான் வந்தது.

    “இங்க பாருங்க சார்.. நா கூட மதர் பாக்க தான் வெயிட் பண்றீங்க நெனச்சேன். ஆனா மதர் வெளியில வந்தப்ப நீங்க மரத்துக்கு பின்னாடி போய் ஓளிஞ்சிங்க..

    அப்ப தான் நீங்க மதர பாக்க தா அவ்வளவு நேரமா நிக்கல புருஞ்சுகிட்டேன்.. அதான் மதர் போக சொல்லிட்டு நா மட்டும் வந்தேன். நா நெனச்ச மாதிரியும் நீங்களும் மரத்துக்கு பின்னால இருந்து வந்தீங்க.” அவள் சொல்லி முடிக்க

    “ஆமா உண்மை தான். குடுத்திட்டு சொல்லிட்டு போலாம் தா வந்தேன்.”

    “எத குடுத்திட்டு என்ன சொல்லிட்டு புரியாமலே பேசிட்டு இருக்கீங்க?” அவள் சீரியஸ் தோணியில் கேட்க

    நான் எனக்கு பின்னால் கையில் வைத்திருந்த டம்ளரை அவளை நோக்கி நீட்டி

    “இத தான் யார்ட்ட குடுக்க தெரியல. அதான் உன்கிட்ட குடுத்திட்டு தாங்க்ஸ் சொல்லிட்டு போலாம் வந்தேன்” சொல்ல அதுவரை முகத்தை சீரியஸாக வைத்த்திருந்தவள் சட்டென்று மாறி குப்பீரென்று சிரித்துவிட்டாள்..

    இந்த டம்ளர குடுக்குறத்துக்கா வெயிட் பண்ணிட்டே இருந்தீங்க.? அவள் கேட்டதும் உடனே இல்லை என்று தான் சொல்ல தான் தோன்றியது. ஆனால் சிறிது நேரத்திற்கு முன் அவளின் முகம் இருந்தததை பார்த்துவிட்டு என் கையில் வைத்திருந்த சிகப்பு நிற ரோஜாவை குடுக்காமல் வெறும் டம்ளரை மட்டும் குடுத்தேன். இப்போது காதலை சொல்லி அவளிடம் இருந்து எந்த விதமான கசப்பை பெற்றுக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை..

    மீண்டும் அவள் தான் “ஹலோ சார் டம்ளர இப்ப குடுக்குற ஐடியா இருக்கா?” என தன் தலையை சாய்த்து என் முகத்தை பார்த்து கேட்க

    “ம்ம்.. இந்தா ங்க” அவளிடம் டம்பளரை குடுத்தேன்.

    “வேற எதுவும் இல்லைல.” கேட்க

    “வேற என்ன என் மனசுல உன் மேல காதல் தான் இருக்கு. அத இப்ப சொன்னா நீ ஏத்துக்குவியா தெரியலயே. ஒருவேளை என்னையும் என் காதலையும் வேண்டாம்” என சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதை எல்லாம் வெளிப்படுத்தாமல்

    “வேற என்ன காபி சூப்பர். அதுக்கு தாங்க்ஸ் மட்டும் சொல்லனும். அவ்வளவு தான்”

    “இட்ஸ் ஓகே.. இருக்கட்டும் பரவாயில்ல.. அப்ப நா போலாம்ல.. மதர் தேடுவாங்க.” சொல்ல

    என் மனம் அவள் இன்னும் சிறிது நேரம் நின்று பேசினால் நன்றாக இருக்கும் என்றது. ஆனால் அதை சொல்ல அப்போது எனக்கு தைரியமில்லை. அதனாலே அவளிடம்

    “ம்ம்.. போலாம்” என்றேன். நான் அதை சொன்ன அடுத்த வினாடி என்னிடம் இருந்து பிரிந்து சென்றாள். அது தற்காலிகமான பிரிவு என்றாலும் ஏனோ என் மனதை வருத்தி வாட்டியது.

    மதிய சாப்பாட்டிற்கு பின் அவள் என் கண்ணில் படவே இல்லை. அது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது. இருந்தாலும் நாளை எப்படியும் என் கண்ணில் படுவாள். பேசுவாள் என்ற சிறு நம்பிக்கையில் இருந்து முதல் நாளை வேலை முடிந்தவுடன் அந்த சிஸ்டரிடம் மட்டும் சொல்லிவிட்டு என் வீட்டிற்கு கிளம்பினேன். காரில் வரும் போது அவளின் நினைவாக தான் இருந்தது.

    அப்போது தான் ஒன்று புரிந்தது. எப்போதுமே பெண் என்பவள் விசித்திரமானவள் வித்தியாசமனாவள். இந்த உலகில் பெண் என்பவள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் தெரிந்தாலும் இந்த சமுதாயத்தில் அவர்களுக்கு பல பெயர்கள் இருக்கின்றன.

    இந்த சமுதாயம் தான் அந்த பெண்களுக்கு ஒரு தகுதியில்லாத சூழ்நிலையை அமைத்து அதற்கு தகுதியில்லாத ஒரு பெயரையும் வைத்து அல்லாடவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அவர்களும் இந்த சமுதாயம் கட்டாயபடுத்தி குடுக்கின்ற வாழ்க்கை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வாழ வேண்டும் என்ற கட்டாயத்தில் வாழ்கின்றனர்.

    அவளை பற்றி சிந்தனைகள் வந்தவுடன் ஏனோ தெரியவில்லை இந்த சமுதாயத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த பெண்களையும் பற்றிய சிந்தனை வந்துவிடுகிறது.

    அது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை விடை புலபடவில்லை. ஒருவேளை வாழ்க்கை இனி எதாவது ஒரு தருணத்தில் தெரியபடுத்தலாம். இது மாதிரியான பல சிந்தனைகள் அவளை பற்றியும் பொதுவாக பெண்களை பற்றியும் வந்துக் கொண்டே இருந்தது. அந்த சிந்தனையில் மூழ்கியபடியே வீடு வந்து சேர்ந்தேன்.

    அதன்பின் அன்றைய தினம் அவளின் நினைப்பில் கழிந்தது. அன்றைய தினம் மட்டுமல்ல அடுத்து வந்த தினங்களும் தான். காரணம் அவளுடான சாதாரண பேச்சுக்கள். அந்த பேச்சுகளே ஏதோ ஒரு வாழ்க்கை அவளுடன் வாழுகின்ற மாதிரி பிம்பத்தை ஏற்படுத்தியது.

    கட்டிட வேலையை சரியாக நடக்கிறதா என்பதை வாரத்திற்கு ஒரு முறை பார்த்தால் கூட போதுமானது தான். ஆனால் இவளை பார்த்து பேச வேண்டும் என்பதற்காகவே நான் தினமும் அந்த ஹோமிற்கு சென்று வேலையை பார்ப்பது போல் இவளை பார்த்துக் கொண்டிருந்தேன். இதுவே என் அன்றாட வேலையாக மாறியது.

    இதற்கிடையில் என் மனதில் இருப்பதை அவளிடம் வெளிப்படுத்த தக்க சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். இதுவரை நான் பார்த்து பழகி ருசித்த பெண்களுக்கு எல்லாம் சந்தர்ப்பம் அமையவில்லை என்றால் ஏதோ ஒருவகையில் நானே அந்த சந்தர்பத்தை ஏற்படுத்தி என் காரியத்தை சாதித்து கொள்வேன். ஆனால் இவள் மட்டுமே வித்தியாசமானவள்.

    அதாவது மாயம் செய்யும் மாயக்காரி. என்னிடம் எதும் சொல்லாமலே ஏதோ ஒன்றை செய்துக் கொண்டிருக்கிறாள். அதற்கு நானும் கட்டுபட்டுக் கொண்டே இருக்கிறேன். ஆனால் இந்த கட்டிட வேலையை முடிப்பதற்குள் என் மனதில் இருப்பதை தெரியப்படுத்தி விட வேண்டும் என உறுதியாக இருந்தேன்.

    இதோ நான் வந்த வேலையை முடிவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. அவளிடம் என் மன ஓட்டத்தை தெரியபடுத்த வீட்டில் இருந்து கிளம்புகிறேன். நான் சொல்வதை ஏற்றுக் கொள்வாளா? இல்லை மறுத்து விடுவாளா என தெரியவில்லை.

    எதுவாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என மனதில் நினைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். நாம் வேண்டுமானால் அவளின் மனதை நல்வழியில் மாற்ற முயற்சி மட்டும் செய்து பார்க்கலாம் என நினைத்திருந்தேன்.

    அதை மீறி இவளின் மனதை மாற்ற வேறு எதுவும் செய்ய எனக்கு தோன்றவில்லை. இன்று அவளிடம் எப்படியும் தெரியபடுத்தி விட வேண்டும் என்ற உறுதியோடு காரில் சென்று கொண்டிருக்கிறேன்.. நான் நினைத்ததை விட வேகமாகவே அந்த ஹோமை வந்து அடைந்துவிட்டேன்.

    முதல் வேலையாக என் கண்கள் அகல்யாவை தான் தேடியது. இல்லை இல்லை தேடி அலைந்தது. சில நிமிட அலைச்சலுக்கு பின் நானே அவளை அகல்யா முதன்முறையாக பெயரை சொல்லி கூப்பிட்டேன். அவள் பெயரை சொன்ன போது என் மனதில் ஒரு சிறு சந்தோஷம் ஏற்பட்டது.

    எனக்கு ஏற்பட்ட மாதிரி அவளுக்கு ஏற்பட்டதா என தெரியவில்லை. இப்போது அதை எல்லாம் பார்த்து தெரிந்து கொள்ளக் கூடிய மனநிலையில் நானில்லை. முதலில் என் மனதில் இருப்பவைகளை அவளிடம் தெரியபடுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது.

    அவளே “என்ன சார் அதிசயமா இருக்கு. நீங்களே கூப்பிட்டு இருக்கீங்க. அதுவும் பேர சொல்லி என்ன விசயம்?” கேட்க

    “இல்ல.. இல்ல.. அது வந்து..”

    “ம்ம்.. என்ன?”

    “உன்கிட்ட ஒன்னு சொல்லனும்”

    “ம்ம்.. சொல்லுங்க.”

    “இல்ல. அது வந்து எப்படி சொல்றது தெரியல என வார்த்தைகளை மென்று முழுங்கினேன்.”

    “அட பரவாயில்ல சார். சும்மா சொல்லுங்க.”

    “இல்ல.. அது.. வந்து..”

    “அட சும்மா சொல்லுங்க..”

    “நீ என்னைய பத்தி என்ன நெனக்கிற?”

    “உங்கள பத்தியா? ம்ம்.. உங்களுக்கு என்ன சார்?” சொல்லவிட்டு என்னை மேலிருந்து ஒரு நோட்டம் விட்டு

    “பாக்க நல்லவரா தான் தெரியுறிங்க.. எங்களுக்கு கட்டடம் கம்மியான பட்ஜெட்டில கட்டிக் கொடுத்து இருக்கீங்க.”

    “ம்ம்.. அப்போ உன்னோட பார்வையில நா நல்லவன். அப்படி தான.”

    “ம்ம். ஆமா சார். அதுல என்ன சந்தேகம்?”

    “அப்போ இந்த நல்லவன நீ கல்யாணம் பண்ணிப்பியா?” என அவள் பார்த்த நாளிலிருந்து என் மனதில் தோன்றியதை இப்போது ஒரு வழியாக அகல்யாவடம் சொல்லிவிட்டேன்.

    இனி அவளின் பதிலுக்காக காத்திருக்கிறேன்..

    நீங்களும் காத்திருங்கள்..

    இனியும் அவள் வருவாள்…

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

    Leave a Comment