காம கதைகள் – என்னுடைய பார்வையில் (Kamakathaikal Ennudaya Parvayil)

வணக்கம். நான் உங்கள் முகிலா.. இந்த பகுதியில் நான் படித்த காம கதைகளை வைத்து என்னுடைய பார்வையில் ஒரு காம கதைகள் எப்படி இருக்கிறது.. நான் அதை எப்படி பார்க்கிறேன் என்பதை சொல்ல இருக்கிறேன். இந்த தலைப்புக்குள் செவ்லதற்குள் முன் சில விஷயங்கள் உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன். அது என் கடமையும் கூட.. 

இது வரை நான் இரண்டு தலைப்புகளில் காமம் மற்றும் காம கதைகளில் பெண்களை பற்றி விரிவாக சொல்லி இருக்கிறேன். என் முதல் பகுதியில் காமம் என்பது ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து சொல்லி இருந்தேன். அதாவது என்னுடைய பார்வையிலிருந்து தான் அதை சொல்லியிருந்தேன்.

அந்த பகுதியில் என் மெயில் ஐடி எதுவும் அதில் குடுக்கவில்லை. அதனால் எந்த பெண்ணும் என்னை தனிபட்ட முறையில் தொடர்பு கொள்ள முடியாத ஒரு சூழல் இருந்தது. அப்படி இருந்தும், இரண்டு பெண்கள், தங்கள் கருத்துக்களை என் பதிவில் கமெண்டில் சொல்லியிருந்தார்கள்.

மிக்க மகிழ்ச்சி எனக்கு.. இந்த தவறை இரண்டாவது பகுதியில் செய்யக்கூடாது என்று முடிவு செய்து தான், அந்த பகுதியை எழுதி அனுப்பினேன். 

அந்த பகுதியும் என் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் வெளியானது. அது இல்லை பிரச்சனை. அந்த பகுதியில் என் மெயில் ஐடி குறிப்பிட்டு இருந்தேன்.

ஏன்னென்றால் அந்த பகுதியை படிக்கும் திருமணம் மற்றும் திருமணம் ஆகாத பெண்கள், தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த தான் அதை குறிப்பிட்டு பதிவை அனுப்பினேன். ஆனால் நடந்தது நேர்மாறு.. அந்த பகுதியில் காமத்தில் ஆண்களின் தவறான புரிதல் பற்றி விரிவாக சொல்லி இருந்தேன்.

அதாவது ஒரு ஆண் காமத்தில் பெண்களை தவறாக புரிந்து வைத்திருக்கிறான் என்பதை பற்றியும். அவர்கள் பெண்களை எப்படி, தங்கள் கதைகளில் சித்திரக்கிறார்கள் என்பது பற்றியும் தான் சொல்லியிருந்தேன்.

நியாமாக பார்த்தால் சில ஆண்கள் செய்யும் தவற்றை தான் சொல்லியிருந்தேன். இதற்கு பெண்கள் மத்தியில் இருந்து நிறைய வரவேற்பு மற்றும் கருத்துகள் வரும் என்று நினைத்தேன். 

ஆனால் அப்படி நடக்கவில்லை.. அந்த பகுதி வெளியான சில மணி நேரத்திலே, ஐந்து மேற்பட்ட  ஆண்களிடம் இருந்து அந்த பதிவுக்கு நல்ல விதமாக கருத்துகளை சொல்லியிருந்தனர். அவர்கள் ஏன் அப்படி சொன்னார்கள் என்பது எனக்கு தேவையில்லாத ஒன்று…

தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. ஆனால் நான் பெண்களிடம் இருந்து தனிபட்ட முறையிலாவது கருத்துகள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி எதுவும் இதுவரை வரவில்லை.  அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று பார்க்கையில், என் மனதில் தோன்றிய சில காரணங்கள்… 

1. கதையை இன்னும் எந்த ஒரு பெண்ணும் படிக்காமல் இருந்திருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு குறைவு தான் தெரியும்… இருந்தாலும் என் மனதில் தோன்றியது. 

2. நான் ஒரு பெண்ணா என்ற சந்தேகம் அவர்கள் மனதில் வந்திருக்கலாம்.. நான் ஒரு பெண் தான், என்று நிரூபித்துவிட்டு என் பதிவை சொல்ல வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை.. கருத்துகளை சொல்வதற்கு ஒரு பெண் என்று நிரூபித்து ஆக வேண்டுமா? என்ன? சிந்தித்து பாருங்கள்.. 

3. எதாவது ஒரு பெண் என் இரண்டு பகுதியை படித்திருக்கலாம். கருத்துகளை ஏன் சொல்ல வேண்டும். கருத்துகள் மூலம் தங்கள் பெயர் வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்திருக்கலாம்… ஒரு கருத்தை மறைமுகமாக அது சம்மந்தபட்ட நபரிடம் சொல்ல தயங்கினால் வாழ்க்கையில் மற்ற காரியங்களை எப்படி எதிர் கொள்வார்கள்? என்று தெரியவில்லை. புரியவில்லை.. 

4. ஒரு வேலை நான் கதை எழுதாமல் கருத்துகளை பதிவு செய்வதால் சில பெண்களுக்கு அது பிடிக்காமல் கருத்துகளை சொல்லாமல் இருந்திருக்கலாம்… மேலே சொன்ன காரணங்கள் தான் என் மனதில் எழுந்தவை.. அவை எல்லாம் சிறிது வருத்தத்தை தந்தாலும் ஆண்களின் கருத்துகள் அதை மறைத்து மகிழ்ச்சியை தந்தது என்று தான் சொல்ல  வேண்டும்… இப்போது இந்த தலைப்புக்குள் செல்லலாம்… 

என்னுடைய பார்வையில் கதைகளின் உலகம் கொஞ்சம் வித்தியாசமான ஒன்று தான். ஏன்னென்றால் தங்கள் கருத்துகளை, சுதந்திரமாக வெளிபடுத்த வழிவகை ஏற்படுத்தி தந்துள்ளது.. அது கற்பனையாக இருந்தாலும் சரி… உண்மை சம்பவமாக இருந்தாலும் சரி.. வெளிப்படுத்த, முழு சுதந்திரத்தை தருகிறது, எழுதும் நபருக்கு.

பொதுவாக கதைகளின் உலகம் கற்பனை உலகமே. என் பார்வையில் கதைகளில் இரண்டே வகை தான்.. ஒன்று கற்பனை கதை.. இரண்டாவது சமுதாயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து, ஒரு தனிநபர், எழுதும் கதை.. இது காம கதைக்கும் பொருந்தும்.. 

சாதாரணமான கதைகளுக்கு நிறைய தலைப்புகள் இருக்கின்றன. அதை வைத்து எவ்வளவு கதைகள் சிறுகதைகளாக, தொடர்களாக, நாவல்களாக வெளிவந்துள்ளன. காதல் என்ற ஒன்றை எத்தனை முறை கதையில் சொன்னாலும் படிக்கும் நமக்கு இன்னும் சலிப்புதட்டமால் தான் இருக்கிறது.

அது மாதிரி தான் இந்த காமகதைகளும். கற்பனை கதைகளில் வித்தியாசத்தை எதிர்பார்க்கலாம். ஏன்னென்றால் எழுதும் நபரின் கற்பனையை பொறுத்தது.. ஒவ்வொரு நபரின் கற்பனை திறனும் ஒன்றாக இருக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை.. 

காம கதை எழுதும் எந்த ஒரு நபருக்கும் நான் மேலே சொன்ன வகைகள் நிச்சயமாக பொருந்தும்.. இந்த இரண்டு முறையில் ஏதாவது ஒன்றை வைத்து, ஒரு நபர் கதை எழுத, நிச்சயமாக முடியும்..

கதையின் கரு கற்பனையாக இருந்து ஒரு கற்பனை கதாபாத்திரத்தை வைத்து எழுதினால், அந்த கதையை கற்பனை கதை என்று ஏற்றுக் கொள்கிறோம்.. இதை வேறு ஒரு விதமாக இந்த தளத்தில் எழுதபவர் கையாள்கின்றனர். அது என்னவென்றால் கதை முழுதும் கற்பனை தான்..

அதில் எழுதும் அந்த ஆணோ அல்லது பெண்ணோ தங்களின் பார்வையிலிருந்து அந்த கதை சொல்லி கதையை நகர்த்தி கொண்டு போய் தானே ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ காமம் கொண்டு உடலுறவு செய்வது போன்று எழுதபட்டு இருக்கும்.. 

அதை படிக்கும் போது நம் மனதில் அந்த நபரின் வாழ்க்கையில் நடந்திருக்கும் போல என்ற ஒரு மாயை படிப்பவரின் மனதில் தோன்றிவிடும்.. அந்த கதை இரண்டு மூன்று முறை நன்றாக படித்தால் அது கற்பனை கதையா? அல்லது நிஜ சம்பவகதையா என்று தெரிந்துவிடும்.. தமிழ் வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி இருக்கு என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எப்படி அதை உணர்கிறீர்கள் என்பதை தாங்கள் தான் சொல்ல வேண்டும். 

அடுத்த வகை ஒருவரின் வாழ்வில் உண்மையாக நடந்த ஒரு காம சம்பவம் அல்லது அனுபவத்தை வைத்து எழுதுவது.. இந்த வகையில் ஒரு நபரால் நிறைய கதைகளை கண்டிப்பாக எழுத முடியாது.. அதை மீறி எழுதினால் அவருக்கு நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது.. 

என்னுடைய தனிப்பட்ட கருத்தை அடிப்படையாக வைத்து தான் இதை நான் சொல்கிறேன். மற்ற பெண்ணின் மனநிலைமை இது தானா? என்று எனக்கு தெரியாது. அதை அறியும் ஆற்றலும், சக்தியும் என்னிடம் இல்லை.. ஒரு பெண் இந்த மாதிரி கதை எழுதுபவரை பற்றி இரண்டு விதமாக யோசிப்பாள்.

ஒன்று அந்த நபர் உண்மையை சொல்லி இருந்து  அவருக்கு நிறைய பெண்ணை திருப்தி படுத்திய அனுபவம் உண்மையாக இருந்தால், அந்த மாதிரி நபரிடம் உறவு வைத்து கொள்ள ஆசைப்படுவாள்… அந்த ஆணால் தன்னை திருப்திபடுத்த முடியும் என்று நினைப்பாள்.

அவர்களால் தனக்கு சந்தோஷத்தையும் தந்து, ஏக்கத்தையும் தீர்த்து, மன நிம்மதியை கொடுக்க முடியும் என்று நம்புவாள்.. அவள் கொண்டிருந்த நம்பிக்கை எவ்வளவு தூரம் அளவுக்கு சந்தோஷத்தையும், திருப்தியையும் கொடுக்கும் என்று பார்த்தால் அது முழுக்க முழுக்க அந்த ஆணின் செயல்களை பொறுத்தது தான். சந்தோஷமும் கிடைக்கலாம். ஏமாற்றம் கூட நடக்கலாம்.. 

இன்னொன்று இந்த மாதிரி நபர் அதிக பெண்ணிடம் உறவு வைத்து திருப்தி படுத்தி இருக்கிறேன் வெளிப்படையாகவே சொன்னால் அதை ஒரு பெண் மற்றொரு விதமாக யோசிப்பாள்.

பல பெண்களிடம் உறவு வைத்து இருந்த ஒரு ஆணிடம் உறவு வைத்து கொள்ள வேண்டுமா? என்ற ஒரு யோசனை அல்லது எண்ணம், சிந்தனை இது மாதிரி கண்டிப்பாக அவள் மனதில் வரும்.. வந்தே தீரும்…

இது ஏற்று கொள்ளக் கூடிய ஒரு நிதர்சனமான உண்மையாக நான் நினைக்கிறேன். அதையும் மீறி வைத்துக் கொண்டால் உடலில் ஏதாவது பிரச்சினைகள் வருமா? என்ற பயத்திலே அவளுக்கு பல உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் வரக் கூடும்.. 

இந்த இரண்டு முறை தவிர இன்னொரு முறையில் கதை எழுதுகின்றனர். அது என்னவென்றால் ஒரு ஆண் தான் எழுதிய கதைகள், ஒரு பெண்ணுக்கு பிடித்து போய் அந்த நபரிடம் பேசி பழகிய, சிறிது நாள்களிலே அவள் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த காம அனுபவத்தை கதையாக எழுத சொல்கிறாள்.

இதை மையமாக வைத்து சிலர் கதை எழுதுகின்றனர். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை… எந்த ஒரு பெண்ணும் தான் கட்டிய கணவனிடம் அல்லது காதலனிடம் கண்ட காம அனுபவங்களை முன் பின் தெரியாத அடுத்த நபரான ஒரு ஆணிடம் எழுத சொல்லமாட்டாள்.

தன் வாழ்க்கையில் நடந்த அந்த அனுபவத்தை தானே தான் எழுதவாள்.. இது மாதிரியான நிறைய ஆங்கில கதைகளை நான் படித்திருக்கிறேன். அப்படி இருக்கையில் இந்த மாதிரியான கதைகளை  எழுதுவதற்கு எப்படி சாத்தியம்? என்ற ஒரு கேள்வி என் மனதில் நீண்ட நாட்களாக இருக்கிறது.. 

ஒரு பெண், முன் பின் தெரியாத ஆணிடம் பழகி, அவனை ஏதோ ஒரு அளவுக்கு புரிந்து, அவனுடன் காமத்தில் முழு சம்மத்துடன் தன்னை இணைத்து, உடலுறவு வரை செல்ல தெரிந்த  அவளுக்கு, அதை ஒரு கதையாக அதுவும் தமிழில் எழுதுவது பெரிய விசயமாக இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து.

இதை அந்த பெண்ணே தாராளமாக எழுதலாம் என்பது என் சொந்த கருத்து.. ஒரு அனுபவ கதை எடுத்துக்காட்டுக்கு வைத்து அதே போல் தான் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை கதையாக எழுதுவது பெரும் கடினமான ஒன்றாக எனக்கு தெரியவில்லை..

மற்றவரிடம் சொல்லி எழுதப்படுவது எப்போது சாத்தியம் என்றால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய பெண் தன்னால் எழுத முடியாத சூழல் ஏற்படும் போது அடுத்த நபரை நாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதுவும் இப்போது இருக்கும் அவசர காலத்தில் மிக மிக குறைவு தான்… 

சமீப காலமாக இந்த தளத்தில் வரும் கதைகள் எல்லாம் குடும்ப உறவு முறைகளை வைத்தே பெரும்பாலும் வருகின்றன. அது ஏன் என்று தெரியவில்லை.. ஒரு வேலை படிக்கும் நபர்களின் மனநிலைமை மாறி அது மாதிரியான கதைகளை தான் விரும்புகின்றனர் போலும்…

குடும்ப கதைகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான் மிகைப்படுத்தியும், கற்பனையயும் வைத்து எழுத முடியும்.. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி மாதிரி தான்.

அளவுக்கு அதிகமாக கற்பனை என்ற பெயரில் தவறாக சித்திரித்தோ அல்லது அதிகமாக  மிகைப்படுத்தி சொன்னால் அந்த கதையின் அழகை அது கதையின் ஆரம்பத்திலே கெடுத்துவிடும்.. இது நான் படித்த கதைகளை வைத்து சொல்லக்கூடிய ஒரு கருத்து தான்..

ஒவ்வொரு கதையும் எழுதும் நபரின் மனநிலைமையை பொறுத்தது தான் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் கதைகளில் பயன்படுத்தபடும் வார்த்தை பொறுத்தே அந்த கதை முடிவு தீர்மானிக்கபடுகிறது.

ஒரு பகுதி கதையாக இருந்தாலும் அதில் பயன்படுத்திய வார்த்தைகள் சரியாக இருந்து ரசிக்க தக்க வகையில் இருந்தால் அந்த கதை நிச்சயம் படிப்பவரின் மனதில் நிலைத்து நிற்கும்.. உதாரணமாக மகிழ்ச்சி தந்து மகிழச்சியடைந்தாள். இந்த கதை பற்றி ஏற்கெனவே கருத்து தெரிவித்து விட்டேன். அந்த கதையில் எந்த ஒரு வார்த்தையும் தேவையில்லாமல் இருப்பது போன்று எனக்கு தெரியவில்லை.. 

அடுத்த கதை மகள் அம்மாவை அணைத்து.. (தலைப்பு சரியாக தெரியவில்லை.. சமர் எழுதிய கதை தான்) இது ஒரு குடும்பத்துக்குள் நடக்க கூடிய ஓரின சேர்க்கை கதை.. அதுவும்  திருமணம் ஆகி உண்மையான காமத்தை அனுபவித்த இரு பெண்களுக்கிடையே நடக்கும் ஒரு நிகழ்வு தான் அந்த கதையின் கரு.. அதை எடுத்து சென்ற விதம் அருமை.. 

இதே மாதிரி தொடர் கதையான மாங்கல்யம் தந்துனானே என்ற கதை எழுதியது ஒரு ஆண். தன்னை ஒரு பெண்ணாக நினைத்து ஒரு திருமணம் ஆன பெண்ணின் உணர்வுகள், உணர்ச்சிகள் எப்படி இருக்கும் சொன்ன விதம் அருமை.. அதை ஆரம்பித்த விதமும் முடித்த விதமும் அவ்வளவு அருமை.. அந்த தலைப்பை கெடுக்காமல் எழுதியது மிக சிறப்பு… 

என்னை பொறுத்தவரையில் ஒரு காமகதை எப்படி இருக்க வேண்டும்? 

1. கதையின் தலைப்பை சொன்னவுடன், கதையின் மைய கரு இது தான் என்று சொல்லும் அளவுக்கு, படிப்பவரகன் மனதில் நிலைத்து நிற்க வேண்டும்..

2. கதையின் தலைப்பு மறைமுகமாகவே இருக்க விரும்புவேன். அது தான் என்னை படிக்க தூண்டும். சில சமயங்களில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இருக்கும். அது எனக்கு இரண்டாம் பட்சம்தான். 

3. கதை எழுதுபவர் எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களே கொண்டு எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்.. 

4. இது உரையாடல்களுக்கு பொருந்தும்.. உரையாடல் மிகைப்படுத்தாமல் இருந்தால் ஒரு இயற்கை தன்மையோடு நன்றாக இருக்கும். சங்க தமிழ் அல்லது ஒப்பனை தமிழில் எழுதினாலும் நன்றாக  தான் இருக்கும். ஆனால் அது எழுதுபவரின் திறமை மற்றும் பயன்படுத்தும் வார்த்தைகளை பொறுத்தே அமையும்… 

5. கதைக்கு மிக முக்கியமான ஒன்று. கதைக்கான சூழல்.. கிராமமா? அல்லது நகரமா? இதை பொறுத்தே உபயோகபடுத்தபடும் வார்த்தைகளின் தன்மை மாறுபடும். அடுத்து அந்த கதையின் கதாபாத்திரம்… எந்த வயதுடைய ஆணோ அல்லது பெண்ணோ எப்படி வார்த்தைகளை நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவார்கள் என்று தெரிந்து வைத்து கதை எழுதினால் சிறப்பாக இருக்கும்… 

இறுதியாக, கதையின் தலைப்புக கதையின் கரு, சூழல் மற்றும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் குடுத்து கதை எழுதினால் கண்டிப்பாக சிறப்பானதாக இருக்கும் என் தனிப்பட்ட கருத்து.. 

நான் இதுவரை சொன்ன அனைத்து கருத்துகளுக்கும் என் மனதில் தோன்றிய  சொந்த கருத்துக்கள் தான்.. மற்ற பெண்களும் இதை தான் எதிர்பார்பார்களா? அல்லது இது போன்று இருக்கும் கதைகளை தான்  விரும்புவார்களா? என்று என்னிடம் வந்து கேட்க கூடாது.. 

நான் கதை எழுதும் ஆண் அல்லது பெண்ணிடம் இருந்து எந்த மாதிரியான கதையை எதிர்பார்க்கிறேன் என்பதை தான் இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன்… 

எந்த ஒரு குறிப்பிட்ட நபரை வைத்தோ அல்லது அவர்கள் எழுதிய கதைக்கோ இந்த பதிவு போடவில்லை. யாரையும் குறையோ, குற்றமோ கூறவில்லை. 

இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை மறக்காமல் [email protected] தெரிவியுங்கள்…

நன்றி… 

அன்றும் இன்றும் என்றும் காமத்தை ரசிக்கும் முகில்… 

Leave a Comment